மரபணு விதைகள், விவசாயிகளின் எதிர்ப்பு வலுத்தது

மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகள் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வலியுறுத்தல்
சேலம்: தேசிய இயற்கை வேளாண் மாநாடு வழிகாட்டல் குழுவின் மேற்கு மண்டல கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. இதில், தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் கூறியதாவது:
உலகளாவிய இயற்கை விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும் மாநாடு கோவை கொடிசியாவில் செப்டம்பர் 12, 13, 14 அன்று நடைபெற உள்ளது. அதற்கான மேற்கு மண்டல கலந்துரையாடல் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில், மரபணு மாற்ற தொழில்நுட்பத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதை குறிப்பிட்டபடி, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகளாக இரண்டு விதைகளை அறிமுகம் செய்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பாண்டியன் கூறுகையில், மரபணு மாற்றப்பட்ட விதைகள் உயிர் கொல்லி நோய்களை ஏற்படுத்தும், மண் மலட்டு தன்மை கொண்டதாக மாறும், மேலும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயம் அழிந்து போகும் என்பதால், தமிழ்நாடு ஏற்கனவே மரபணு மாற்றத்துக்கான தொழில்நுட்பத்திற்கு நிரந்தர தடை விதித்து அதை நடைமுறைப்படுத்தியிருப்பதாக தெரிவித்தார். எனவே, வல்லுனர் குழுவை அமைத்து, உரிய ஆய்வு நடத்தி, நெல் விதைகள் குறித்து உண்மைத்தன்மையை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த கூட்டத்தில், வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் ராமசாமி, முருகபூபதி, வாழை கருப்பையா அஜித்தன், விஞ்ஞானி முத்தமிழ்செல்வன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இவ்வாறு பாண்டியன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu