காரை தாரு மாறாக ஓட்டிய 17 வயது சிறுவனால் பெண் பரிதாப உயிரிழப்பு

காரை தாரு மாறாக ஓட்டிய 17 வயது சிறுவனால் பெண் பரிதாப உயிரிழப்பு
X
பவானியில், 17 வயது சிறுவன் ஓட்டிய கார் குடிசை வீட்டுக்குள் மோதியதால் தூங்கிக் கொண்டிருந்த பெண் உயிரிழந்தார்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே மூன்றுரோடு ஜல்லிகல்மேடு பகுதியில் சோகமான விபத்து ஒன்று நடைபெற்றது. பவானி – மேட்டூர் சாலையோரத்தில் அமைந்துள்ள குடிசை வீடொன்றில், நேற்று முன்தினம் (நள்ளிரவு 1:00 மணியளவில்) ஒரு ஹோண்டா சிட்டி கார் அதிவேகமாக நேராக வீடுக்குள் புகுந்தது.

அந்த நேரத்தில், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த கற்பகவல்லி (வயது 35) என்பவர், இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதே வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த அவரது கணவர் கருப்பணன் உயிர் தப்பினார்.

இந்த காரை ஓட்டியது, 17 வயதான பாலிடெக்னிக் மாணவன் என தெரியவந்துள்ளது. மாணவனின் தந்தை திருப்பூரைச் சேர்ந்த விஜய் ஆனந்த் என்பவர். கோவையில் தனியார் கல்லூரியில் பயிலும் அந்த மாணவன், விடுமுறை காரணமாக பவானியில் உள்ள மாமாவின் வீட்டிற்கு வந்திருந்தார். வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், மாமாவின் ஹோண்டா சிட்டி காரை எடுத்துச் சென்று ஓட்டியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடில் புகுந்துள்ளார்.

விபத்தில் மாணவனுக்கும் சிறு காயம் ஏற்பட்டது. காரில் ஏர்-பேக் திறந்ததால் அவர் பெரும்பாதிப்பின்றி தப்பியுள்ளார். தற்போது அவருக்கு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், இதுவரை வழக்கு பதிவு செய்யாமல், பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஊரில் பெரும் சோகத்தையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story