கேரளா மீன்கள் ஈரோட்டில் அதிக விலை விற்பனை

கேரளா மீன்கள் ஈரோட்டில் அதிக விலை விற்பனை
X
தமிழ்நாட்டில் தற்போது மீன் பிடி தடை காலம் அமலில் இருப்பதால், கடலோர மீன்கள் வரத்து அதிகம் கேரளாவிலிருந்து தான் நிகழ்கிறது

கேரளா மீன்கள் ஈரோட்டில் அதிக விலை விற்பனை

ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் சந்தையில் நேற்று கேரளாவில் இருந்து மட்டும் எட்டு டன் மீன்கள் விற்பனைக்காக வந்தன. தமிழ்நாட்டில் தற்போது மீன் பிடி தடை காலம் அமலில் இருப்பதால், கடலோர மீன்கள் வரத்து அதிகம் கேரளாவிலிருந்து தான் நிகழ்கிறது. இதன் காரணமாக சந்தையில் மீன் வரத்து குறைவாக இருந்ததால், விலைகளும் செறிவடைந்தன. கிலோவுக்கு 50 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விலை உயர்ந்தது.

விலை விபரம் (கிலோ ரூபாயில்):

சால்மோன் – ₹900, கொடுவா – ₹800, வெள்ளை வாவல் – ₹1200, கருப்பு வாவல் – ₹900, வஞ்சரம் – ₹1100, மயில் மீன் – ₹800, கிளி மீன் – ₹700, முரல் – ₹450, சங்கரா – ₹400, திருக்கை – ₹400, வசந்தி – ₹550, விளாமீன் – ₹550, தேங்காய் பாறை – ₹550, பெரிய இறால் – ₹700, சின்ன இறால் – ₹500, ப்ளூ நண்டு – ₹700, அயிலை – ₹300, மத்தி – ₹250.

Tags

Next Story