ஐபிஎல் பவுலிங் கிங் – சாஹலுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் பாராட்டு

ஐபிஎல் பவுலிங் கிங் – சாஹலுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் பாராட்டு
X
ஐபிஎல் லில் சிறந்த பௌலர் சகல தான் என்று ஸ்ரேயாஸ் ஐயர் புகழாரம் சூட்டினார்

ஐபிஎல்-லின் சிறந்த பவுலர் சாஹல்தான்.. ஆர்சிபியை வீழ்த்திய பிறகு புகழ்ந்து தள்ளிய ஸ்ரேயாஸ் ஐயர்

பெங்களூர்: யுஸ்வேந்திர சாஹல்தான் ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பாராட்டியுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் மிகச் சிறப்பாக பந்து வீசினார்.

மழையின் காரணமாக 14 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில், சாஹல் 3 ஓவர்கள் வீசி 11 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 96 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 12.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், சாஹலின் பந்துவீச்சை பெரிதும் பாராட்டினார். ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் சாஹலின் பந்துவீச்சு சற்றே சுமாராக இருந்தது. அவரால் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை, அதேநேரத்தில் ரன்களையும் அதிகமாக விட்டுக்கொடுத்தார். ஆனால் கடந்த சில போட்டிகளாக அவரது பந்துவீச்சில் பெரிய மாற்றம் தெரிகிறது. குறிப்பாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஸ்ரேயாஸ் ஐயர் இதுகுறித்து பேசுகையில், "நான் சாஹலுடன் தனிப்பட்ட முறையில் பேசினேன். 'நீங்கள் ஒரு மேட்ச் வின்னர். எங்களுக்கு முடிந்தவரை விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்க வேண்டும். நீங்கள் தற்காப்பு ஆட்டம் ஆட வேண்டிய அவசியமில்லை' என்று கூறினேன். அவர் நிச்சயமாக ஃபார்முக்கு திரும்புவார் என நாங்கள் நம்பினோம். ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் அவர்தான். அதை நாம் எப்போதும் ஆதரிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

Tags

Next Story