சிறந்த போக்குவரத்து கலகதத்திற்க்கான விருதில் சேலம் முதலிடம்

சிறந்த போக்குவரத்து கலகதத்திற்க்கான விருதில் சேலம் முதலிடம்
X
வருடந்தோறும் நடைபெறும் இந்திய அளவிலான சிறந்த போக்குவரத்து கழகத்திற்கான விருதை தமிழக அளவில் சேலம் முதலிடம் சாதனை

முதல் பரிசை தட்டி தூக்கிய சேலம் கோட்ட போக்குவரத்து கழகம்

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த போக்குவரத்து கழகத்திற்கான விருதை தமிழக அளவில் சேலம் கோட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து பொதுவான கட்டமைப்பின் கீழ் கொண்டு வர 1965 ஆம் ஆண்டு ஆகஸ்டு 13-ஆம் நாள் அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) ஏற்படுத்தப்பட்டது.

இக்கூட்டமைப்பு மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக 70 மாநில போக்குவரத்துக் கழகங்கள் பங்கேற்றுள்ளன. இக்கூட்டமைப்பு ஆண்டுதோறும் அனைத்து மாநில போக்குவரத்துக் கழகங்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகின்றன.

இந்த ஆண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்திற்கு எரிபொருள் சேமிப்பு, பாதுகாப்பான இயக்கம், பஸ் பயன்பாடு உள்ளிட்ட நான்கு முக்கிய பிரிவுகளில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறந்த போக்குவரத்து கழகம் என்ற பெருமையை சேலம் கோட்டம் பெற்றுள்ளது.

Tags

Next Story