ரயில்வே கைப்பந்து தொடர், சேலம் அணி அதிரடி வெற்றி

ரயில்வே கைப்பந்து: சேலம் அணி வெற்றி
சேலம்: ரயில்வே கோட்டங்கள் இடையே, பாதுகாப்பு படை அணிகளுக்கு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி தெற்கு ரயில்வே அளவில் கைப்பந்து போட்டி, சேலம் ரயில்வே கோட்டத்தில் நேற்று தொடங்கியது. சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் இப்போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்தப் போட்டியில் சென்னை, திருச்சி, பாலக்காடு, திருவனந்தபுரம், சேலம் ஆகிய ரயில்வே கோட்ட அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியில், 25 புள்ளிகள் எடுத்த சேலம் அணி, பாலக்காடு அணியை தோற்கடித்தது. மொத்தம் 3 நாட்கள் போட்டி நடந்து, நாளை மாலை பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது.
## **பதிவு செய்து உரிமம் பெற மகளிர் விடுதிகளுக்கு அறிவுரை**
சேலம்: மகளிர் விடுதிகள் உரிய முறையில் பதிவு செய்து உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"சேலம் மாவட்டத்தில் அரசு, அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளை, சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், தொழிற்சாலைகளின் கீழ் செயல்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகள், தனியார் விடுதிகள் என அனைத்து வகை விடுதிகளும் சமூக நலத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு, https://tnswp.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
உரிமம் பெறாமல் விடுதி செயல்படுவது குற்றமாகும். இதை மீறி விடுதிகள் செயல்படுவது தெரிந்தால் அவை நிரந்தரமாக மூடப்படும். உரிமம் தொடர்பான விபரங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக அறை எண்: 126ல் செயல்படும் சமூக நல அலுவலகத்தை அணுகலாம்" என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu