சேலம் மாவட்ட முருகன் கோவில் மண்டல பூஜை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு

சேலம் மாவட்ட முருகன் கோவில் மண்டல பூஜை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு
X
நேற்று முன் தினம் குள்ளப்பம்பட்டியில் நடந்த முருகன் கோயில் பூஜையில் புதுச்செரி முதல்வர் ரெங்கசாமி கலந்து கொண்டார்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள குள்ளம்பட்டியில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி முருகன் கோவில், அண்மையில் புதிதாகக் கட்டப்பட்டு, 18 சித்தர்கள் சிலைகள் வைத்து கோலாகலமாக கும்பாபிஷேகம் கடந்த 4ம் தேதி நடைபெற்றது. நாயகம் சித்தரின் தலைமையில் நடைபெற்ற திருப்பணி பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கோவிலில் மண்டல பூஜைகள் கடந்த 5ம் தேதி முதல் தொடங்கி, இறுதி நாள் சிறப்பு பூஜைகள் நேற்று நடத்தப்பட்டன. இதில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் வருகை தந்து, பாலதண்டாயுதபாணியை தரிசித்து சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர், கோவிலில் வந்திருந்த பக்தர்களுக்கு அவர் அன்னதானம் வழங்கினார். இந்த புனித நிகழ்ச்சியில் குள்ளம்பட்டியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு ஆனந்தம் பெற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture