வாழப்பாடியில் அதிகாலை கனமழை – மின்தடையால் மக்கள் அவதி!

வாழப்பாடியில் அதிகாலை கனமழை – மின்தடையால் மக்கள் அவதி!
X
மழையோட வந்த மின்தடை – வாழப்பாடி மக்களுக்கு காலையிலேயே சோதனை

வாழப்பாடியில் அதிகாலை கனமழை

வாழப்பாடி, முத்தம்பட்டி, சிங்கிபுரம், பழனியாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று அதிகாலை, 3:30 முதல் 4:30 மணி வரை ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில், 7:30 மணி வரை மின்தடை ஏற்பட்டது. 4 மணி நேரம் தொடர் மின்தடையால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

இதேபோல் கடந்த, 11ல் மழை வந்த போது வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில், 6 நேரம் மின்தடை ஏற்பட்டது. மழை பெய்யும் போது, சிறிது நேரம் மழை பெய்தாலும், தொடர்ச்சியாக நீண்ட நேரம் மின்தடை ஏற்படுவதால், மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து வாழப்பாடி உதவி மின் செயற்பொறியாளர் பெரியசாமி கூறுகையில், "நேற்று அதிகாலை பெய்த மழை காரணமாக, மரத்தின் காய்ந்த மட்டைகள் மின்கம்பி மீது விழுந்து பழுதடைந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. எந்த இடத்தில் பழுதடைந்துள்ளது என கண்டறிய தாமதம் ஏற்பட்டது. பின், கண்டறிந்து மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது," என்றார்.

சேலத்தில் நேற்றிரவு, 10:30 மணி முதல், 11:00 மணி வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

Tags

Next Story