மொபைல் போன் லாட்டரி விற்பனையாளர்கள் மீது போலீசார் அதிரடி

மொபைல் போன் லாட்டரி விற்பனையாளர்கள் மீது போலீசார் அதிரடி
X
மொபைல் போன் லாட்டரி விற்பனையாளர்களிடமிருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் ₹10,000 பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில், கேரள மாநில லாட்டரிகளை மொபைல் போன்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கெதிராக, போலீசார் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தச் சோதனை நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக தீவிரமாகியுள்ளது.

இந்த நிலையில், பெருந்துறை அருகேயுள்ள திருவேங்கிடம் பாளையத்தில் வசித்து வரும் மோகனசுந்தரம் (42) என்பவர், தனது மொபைல்போனில் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்றதாக தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ₹65,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேபோல், புன்செய்புளியம்பட்டி போலீசார், நம்பியூர் சாலை பகுதியில் ரோந்துப் பணியில் இருந்தபோது, ரியாஸ் (35) மற்றும் அமீர்ஜான் (37) ஆகிய இருவரும் மொபைலில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பதை கண்டறிந்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் ₹10,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், டி.என்.பாளையம் அருகே கணக்கம்பாளையம் காந்தி வீதியில், கேரளா லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட வரதராஜன் (63) என்பவரையும் பங்களாப்புதூர் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story