சேலத்தில் மொபைல் திருட்டு! 2 பேர் சிக்கினர்

சேலத்தில் மொபைல் திருட்டு! 2 பேர் சிக்கினர்
X
சேலத்தில் மொபைல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் போலீசார் கைது செய்தனர். போலீசார் தீவிர சோதனையில் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்

மொபைல் கடையில் திருட்டு – இருவர் கைது

சேலம் பச்சப்பட்டி அருகே குஞ்சான்காடு புது மஸ்ஜித் தெருவைச் சேர்ந்த சபீர் அலி (வயது 31), பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீடு சென்றிருந்தார்.

அடுத்த நாள் காலை கடைக்கு வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, 43,000 ரூபாய் மதிப்பிலான 10 மொபைல் போன்களும், 12,000 ரூபாய் பணமும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

சபீர் அலியின் புகாரின் பேரில், டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடையின் 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்ததில், திருடியவர்கள் சிவதாபுரத்தைச் சேர்ந்த அய்யனார் (19) மற்றும் பூலாவரி கீழக்காடு பகுதியைச் சேர்ந்த நடராஜ் (28) என்பவர்கள் என கண்டறிந்தனர்.

இருவரையும் கைது செய்த போலீசார், திருடப்பட்ட மொபைல் போன்களையும் பணத்தையும் மீட்டனர்.

Tags

Next Story
ai in future agriculture