பைனான்சியரை கடத்த திடப்பட்ட 5 பேர் கைது

X
By - Nandhinis Sub-Editor |24 April 2025 10:30 AM IST
பாலக்கோட்டில், பைனான்சியரை கடத்த முயற்சி வெளிமாநில 5 கூலிப்படையினரை போலீசார் கைது செய்தனர்
சிசிடிவி சாட்சியத்தில் சிக்கிய கடத்தல் கும்பல்
பாலக்கோட்டில் பைனான்ஸ் நிறுவன உரிமையாளரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்ட வெளிமாநில கூலிப்படையினர் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக்திவேல் என்பவரை கடத்த முயன்ற இவர்கள், காரில் வந்து மயக்க ஸ்பிரே பயன்படுத்தி தாக்கினர். அவரது சத்தத்தால் மக்கள் வந்ததும் கும்பல் தப்பியது. போலீசார் விசாரணையில் சிசிடிவி மூலம் ஐந்து பேரையும் பிடித்து கைது செய்தனர். இதில் கர்நாடகா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன், இவர்களில் பலருக்கு ஏற்கனவே கடத்தல் குற்றச்சாட்டுகள் உள்ளதும் தெரியவந்தது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu