வீட்டுக்குள் லாட்டரி விற்ற மூவர் கைது

வீட்டுக்குள் லாட்டரி விற்ற மூவர் கைது
X
லாட்டரி விற்பனைக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பொதுமக்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கின்றது

டி.என்.பாளையம் பகுதிகளில் கேரளா மாநில லாட்டரிகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில், பங்களாபுதுார் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, கள்ளிப்பட்டியில் ஆறுமுக கவுண்டர் வீதியில் வசிக்கும் வெங்கடேஷ் (வயது 43) ஆன்லைன் மூலம் கேரளா லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரது கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, கொங்கர்பாளையம் பாரதி வீதியில் வசிக்கும் பழனிச்சாமி (வயது 71), மற்றும் அரக்கன்கோட்டை அருகே சத்தி - அத்தாணி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த இன்னொரு பழனிச்சாமி (வயது 66) ஆகியோரும் சட்டவிரோதமாக லாட்டரி விற்றது உறுதி செய்யப்பட்டதால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்தும் பயன்படுத்திய மொபைல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story