/* */

கோவையில் பாலத்தில் இருந்து கவிழ்ந்து தீப்பிடித்தது பெயிண்ட் லாரி

கோவையில் பாலத்தில் இருந்து கவிழ்ந்த பெயிண்ட் லாரி தீ பிடித்து எரிந்தது.

HIGHLIGHTS

கோவையில் பாலத்தில் இருந்து கவிழ்ந்து தீப்பிடித்தது பெயிண்ட் லாரி
X

கோவை கருமத்தம்பட்டியில் பாலத்தில் இருந்த கவிழ்ந்த லாரி தீ பிடித்து எரிந்தது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி பேருந்து பணிமனை அருகே ஐதராபாத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு பெயிண்ட் ஏற்றிக்கொண்ட வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்து விபத்துக்குள்ளானது‌. இதில் லாரியில் உராய்வு ஏற்பட்டு திடீரென லாரி முழுவதும் தீ பற்றிக்கொண்டது. லாரியை ஓட்டி வந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் என்பவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனை பார்த்து அருகில் இருந்த பொதுமக்கள் ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் வந்து உடனடியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயில் எரிந்து உருகி சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பெயிண்ட் நாசமானது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 24 April 2022 10:34 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?