நேருக்கு நேர் டூவீலர் மோதியதில் ஒருவர் பலி

நேருக்கு நேர் டூவீலர் மோதியதில் ஒருவர் பலி
X
ஆனங்கூர் அருகே, இரு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பலத்த காயமடைந்த நால்வரில், ஒருவர் உயிரிழப்பு

நேருக்கு நேர் டூவீலர் மோதியதில் ஒருவர் பலி

நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையத்தை சேர்ந்த பிரவீன் குமார் (வயது 35), கூலித்தொழிலாளியான இவர், ஆனங்கூரில் இருந்து தனது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டும் டூவீலரில் பயணித்துக் கொண்டிருந்தார். இதே நேரத்தில், கொளக்காட்டுபுதூர் சேர்ந்த தினேஷ் குமார் (30), அவரது மனைவி ஜீவிதா (25) மற்றும் மகள் தீனா (2) ஆகியோர், ஜேடர்பாளையம் நோக்கி டூவீலரில் சென்றனர்.

ஆனங்கூர் அருகே, கழுவங்காடு பகுதியில் இரு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில், நால்வரும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் உடனே அவர்களை மீட்டு, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரவீன் குமாரை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றியபோதும், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.

இவ்விபத்துக்காக ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story