ஸ்டாலின் பிறந்தநாளில் தி.மு.க. 1,000 பேருக்கு நல உதவி

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுகவின் மேற்கு மண்டல ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் சேலத்தில் சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், சமூக நலன் கருதி 1,000ற்கும் மேற்பட்ட மக்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, அதனை தொடர்ந்து கருத்தரங்கமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் முரளி வரவேற்பு உரையாற்றினார். மாநில செயலர் கிருஷ்ணசாமி தலைமையிலான இந்நிகழ்ச்சியில், சேலம் மக்களவை உறுப்பினர் செல்வகணபதி சிறப்புரை வழங்கினார். தொடர்ந்து நல உதவிகள் பயனாளிகளிடம் நேரில் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ், துணை செயலர் குமரவேல், நாமக்கல் மேயர் கலாநிதி, நலக்குழு கிழக்கு மாவட்ட அமைப்பாளர் பாலு, மேற்கு மாவட்ட அமைப்பாளர் விவேகானந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்று விழாவுக்கு சிறப்பு சேர்த்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu