தோனியின் அதிரடி முடிவு! ராகுல், விஜய்-க்கு பைபை

சிஎஸ்கே பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்கள்.. ராகுல், விஜய்-க்கு டாட்டா பைபை சொல்லப் போகும் தோனி
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் விரைவில் அதிரடி மாற்றங்கள் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு புதிய வீரர்களுக்கு பேட்டிங் வரிசையில் தோனி வாய்ப்பளிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு புதிய வீரர்கள் மாற்று வீரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, 17 வயதான மும்பையைச் சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் ஆயுஷ் மத்ரே அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
ஆயுஷ் மத்ரே ரஞ்சி டிராபி மற்றும் லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்திருந்தாலும், இதுவரை டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாதவர். இருப்பினும், அவரை ஏற்கனவே வலைப் பயிற்சியில் சோதித்ததில் அவர் சிறப்பாகப் பேட்டிங் செய்ததாக சிஎஸ்கே வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக, சிஎஸ்கே அணியில் குர்ஜப்நீத் சிங் காயம் காரணமாக விலகியதால், அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் 'பேபி ஏபி' என அழைக்கப்படும் டெவால்ட் பிரெவிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரெவிஸ் அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதால், சிஎஸ்கே அணி நிர்வாகம் அவரை அவசரமாகத் தேர்வு செய்துள்ளது.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பலவீனமாகக் காணப்படுகிறது. சிவம் துபே அதிரடியாக ஆடக்கூடியவர் என்றாலும், 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை அவர் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மிடில் ஆர்டரின் அதிரடித் திறனை அதிகரிக்கவே டெவால்ட் பிரெவிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு புதிய வீரர்களையும் அணியில் சேர்ப்பதற்கு தற்போதுள்ள வீரர்களில் இருவரை நீக்க வேண்டியிருக்கும். அந்த இருவர் ராகுல் திரிபாதி மற்றும் விஜய் சங்கர் ஆக இருக்கலாம் எனத் தெரிகிறது. இவர்கள் இருவரும் இதுவரை சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளனர்.
சிஎஸ்கே வட்டாரத் தகவல்களின்படி, புதிய மாற்றங்களுக்குப் பிறகு, இம்பாக்ட் வீரரையும் சேர்த்து, சிஎஸ்கே அணியின் பட்டியல் பின்வருமாறு அமையலாம்: ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ஆயுஷ் மத்ரே, சிவம் துபே, டெவால்ட் பிரெவிஸ், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரானா.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu