வனப்பகுதியில் நவீன சாலை இணைப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி யூனியன்களுக்குட்பட்ட மலை மற்றும் வனப்பகுதிகளில் சாலை, பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஊரக பகுதிகளில் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில், கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம், ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் மற்றும் கலைஞரின் கனவு இல்ல திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன, எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சத்தியமங்கலம் அருகே குத்தியாலத்தூர் மற்றும் சக்கரைபாளையம் ஆகிய இடங்களை இணைக்கும் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட உயர்மட்ட பாலம் ரூ.6.59 கோடி செலவில் கட்டப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பர்கூர் பஞ்சாயத்து உள்பட்ட அணைப்போடு கிராமத்தில் ரூ.1.09 கோடி செலவில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ், தம்மு ரெட்டி கிராமத்தில் ₹33.06 லட்சம் செலவில் சாலை அமைக்கப்பட்டு 420 பேர் பயன்பெறும் வகையில், ஒன்னகரை கிராமத்தில் கூடுதல் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மிகவும் முக்கியமானதாக, சோளகனை வனப்பகுதியில் ரூ.10.50 கோடி செலவில் 9.8 கி.மீ. நீளமுடைய புதிய சாலை அமைக்கப்பட்டு, மலைவாசிகள் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு பெரிதும் பயனளிக்கிறது.
இந்த அனைத்து புனரமைப்பு பணிகளும் தற்போது நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu