ராணுவ வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்: புகைப்படம் வெளியீடு..!

பாதுகாப்பு ப்டை வீரர்களுடன் சரிசமமாக அமர்ந்து, மதிய உணவு அருந்தும் மத்திய அமைச்சர்.
ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் ராணுவ வீரர்களின் முகாம்களுக்கு சென்று அவர்களுடன் உரையாடுவார் எனவும், நாளை நடைபெற உள்ள மகாராஜா குலாப் சிங்கின் 200வது ஆண்டு முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'இதற்காக காஷ்மீர் சென்ற மத்திய அமைச்சர் பாராமுல்லா பகுதியில் வீரர்களுக்கான நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, ராணுவ வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டார். பராகானா பகுதிக்கு செல்வதற்காக பாராமுல்லா நகரில் மலப் பிரதேசம் உள்ளிட்ட தரை பகுதிகளிலும் பயணிக்கும் திறன் கொண்ட ராணுவ வாகனம் ஒன்றை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ஓட்டி சென்றார்.
கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுக்கு எதிரான போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு படை வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று மதிய உணவு உண்டதாகவும், தகவலும், புகைப்படமும் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிக உயர்ந்த பாதுகாப்புத்துறைக்கு பொறுப்பு வகித்த போதும், எளிமையை கடைப்பிடித்த அமைச்சர் ராஜ்நாத் சிங் செயல்பாடு, நெட்டிசன்கள் இடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu