ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேரணி

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேரணி
X
சேலத்தில் ஸ்டேட் வாங்கி முன்பிருந்து பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேரணி சென்றனர்

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு பேரணி

சேலம்: ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை ஸ்டேட் வங்கி முன்பிருந்து, தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி நேற்று பேரணி நடத்தினர். முன்னதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் பிரபாகரன் பேரணியைத் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று, கோட்டை மைதானத்தில் பேரணியை நிறைவு செய்தனர்.

இப்பேரணியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.

Tags

Next Story