துணை தேடிய 60 வயது பெண்ணிடம் நகை மோசடி

துணை தேடிய 60 வயது பெண்ணிடம் நகை மோசடி
X
ஈரோட்டை சேர்ந்த 60 வயது விதவை பெண்ணிடம் துணையாக இருப்தாஹாக கூறி நகை பறிப்பு

துணை தேடும் 60 வயது பெண்ணை ஏமாற்றிய இளைஞர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் நசியனூர், ராயர்பாளையத்தை சேர்ந்த 60 வயது பெண், கணவனை இழந்த பிறகு தனியே வசித்து வந்தார். தனக்கு துணை தேவைப்பெற்று திருமணம் செய்யும் நோக்கில், திருமண தகவல் மையத்தில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். இதைக் கண்ட திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த விஸ்வாசகுமாரின் மகன் மனோஜ்குமார் (29), அதற்கு விண்ணப்பித்து, பெண்ணுடன் பழகத் தொடங்கினார்.

ஒருசில நாட்களில் நெருக்கமாகி, அந்த நம்பிக்கையை பயன்படுத்தி, பெண்ணின் நான்கு பவுன் தங்கச்சங்கிலியை திருடிய மனோஜ்குமார், பின்னர் தலைமறைவாகிவிட்டார். பெண் அளித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி, மனோஜ்குமாரை கைது செய்தனர்.

மேலும், திருமண தகவல் மைய வலைதளத்தில் துணை தேடும் பெண்களை குறிவைத்து பணம் மற்றும் நகை திருடுவது மனோஜ்குமாரின் வழக்கமான பழக்கமாகும். இதுவரை பலரை ஏமாற்றியதற்காக, அவரது மீது தமிழகத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நான்கு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மனோஜ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபி மாவட்ட சிறையில் அடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story