வாடிக்கையாளர்கள் கண்முன்னே வெடித்த சமையல் எரிவாயு அடுப்பு,அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்

வாடிக்கையாளர்கள் கண்முன்னே வெடித்த சமையல் எரிவாயு  அடுப்பு,அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்
X
அடுப்பும், சிலிண்டரையும் இணைக்கும் டியூப்பில் ஏற்பட்ட விரிசலே தீ விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

ஈரோட்டில் உணவகம் ஒன்றில் தீ விபத்து-அதிர்ச்சியுடன் தப்பிய பொதுமக்கள்:

ஈரோடு மூலப்பட்டறை பார்க் சாலையில் உள்ள ‘வேல் கபே’ உணவகத்தில் நேற்று காலை 9:15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில் ஏற்பட்ட கேஸ் கசிவால் தீ பரவியது. அந்த நேரத்தில் காலை உணவிற்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் தீப்பற்றியத்தை பார்த்து பரபரப்புடன் வெளியே ஓடினர். தகவலறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர், 10 நிமிடங்களுக்கு பிறகு தீயைக் கட்டுப்படுத்தினர். அடுப்பும் சிலிண்டரையும் இணைக்கும் டியூப்பில் ஏற்பட்ட விரிசலே தீ விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. உடனடி நடவடிக்கையால் ஒரு பெரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.

Tags

Next Story