வக்ப் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் இ.கம்யூ. ஆர்ப்பாட்டம்

வக்ப் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் இ.கம்யூ. ஆர்ப்பாட்டம்
X
வக்ப் சட்ட திருத்தம் மற்றும் காஸ் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இ.கம்யூ போராட்டத்தில் ஈடுபட்டனர்

வக்ப் சட்ட விவகாரம், இ.கம்யூ. ஆர்ப்பாட்டம்

சேலம் கோட்டை பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (இ.கம்யூ.) சார்பில் வக்ப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலர் மோகன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், "வக்ப் திருத்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெறுவதோடு, சிறுபான்மையின மக்களுக்கு இடையூறு செய்வதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல, வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தியதையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் தினேஷ், மாவட்டப் பொருளாளர் கண்ணன், துணைச் செயலர்களான கந்தன், ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story