ஜூலை 1 முதல் தமிழகத்தில் புதிய மின் கட்டண முறை

ஜூலை 1 முதல் தமிழகத்தில் புதிய மின் கட்டண முறை:
2025 ஜூலை 1 முதல் தமிழக மின் வாரியம் புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த முறைபடி, 500 யூனிட் வரை மின் பயன்பாட்டுக்கு குறைந்த கட்டணமே விதிக்கப்படுகிறது. ஆனால் 501 யூனிட் ஆனவுடன் கட்டணத்தில் திடீர் உயர்வு ஏற்படுகிறது. உதாரணமாக, 500 யூனிட் பயன்படுத்தினால் ₹1,330 கட்டணமாக இருப்பது, வெறும் 1 யூனிட் கூடுதலுக்கு ₹2,127 ஆக மாறுகிறது — அதாவது ₹797 கூடுதல் செலவு.
இதன் காரணமாக, யூனிட் கணக்கீட்டில் ஒரு சிறிய மாற்றம் கூட பொதுமக்களுக்கு பெரிய பொருளாதார சுமையாக மாறுகிறது. மேலும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே மீட்டர் ரீடிங் எடுக்கப்படுவதால், ஒரே மாதத்தில் அதிக யூனிட்கள் பயன்படுத்தியதாக பிலில் தெரிகிறது. இதனால், மக்கள் அதிக கட்டணங்களைச் செலுத்த வேண்டிய நிலை உருவாகிறது.
மாதந்தோறும் மீட்டர் ரீடிங் எடுக்கப்பட்டால், பயனாளிகள் பெரிய தொகையைச் சேமிக்கலாம். உதாரணமாக, ஒரு குடும்பம் இரண்டு மாதங்களில் 1000 யூனிட்கள் பயன்படுத்தினால் ₹5,420 கட்டணமாகும். ஆனால், மாதந்தோறும் 500 யூனிட்கள் என்ற கணக்கில் ரீடிங் எடுக்கப்பட்டால், ₹2,660 மட்டுமே செலவாகும். இதன் மூலம் ₹2,760 வரை சேமிக்க வாய்ப்பு உள்ளது.
இது பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஒரு முக்கிய விஷயமாகும். மின் கட்டண முறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அரசு, மாதந்தோறும் மீட்டர் ரீடிங் எடுக்கும் முறையை அமல்படுத்தி, மக்கள் மீது பொருளாதார சுமை ஏற்கக்கூடாதென்ற கோரிக்கை தற்போது பலத்தமாக எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu