நகைக்கடன் புதிய விதிமுறைகள் - விவசாயிகள் எதிர்ப்பு! பொதுமக்கள் கவலை!

நகைக்கடன் புதிய விதிமுறைகள் - விவசாயிகள் எதிர்ப்பு!  பொதுமக்கள் கவலை!
X
ஈரோடு மாவட்டத்தில், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நகைக்கடன் விதிமுறைகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகைக்கடன் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல் – ஈரோடு விவசாயிகள் எதிர்ப்பு :

ஈரோடு மாவட்டத்தில், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நகைக்கடன் விதிமுறைகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விதிமுறைகளின் படி, வங்கிகளில் நகைக்கடன் பெறும் போது, அந்த நகை தனக்கானது என்பதை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதனால், அவசர தேவைகளுக்காக நகையை அடமானம் வைத்து கடன் பெறும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடன் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு, மத்திய நிதி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த புதிய விதிமுறைகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு எதிரானவை எனக் குறிப்பிட்டுள்ளார். அவர், இந்த விதிமுறைகளை ரிசர்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

Tags

Next Story
ai and business intelligence