ஓடையில் வெள்ளப்பெருக்கு , வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

கனமழையால் ஓடையில் வெள்ளப்பெருக்கு - வீடுகளில் புகுந்த தண்ணீரால் மக்கள் அவதி
மேட்டூர் சுற்றுப்பகுதியில் நேற்று அதிகாலை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று முன்தினம் 26.2 மி.மீ. மழை பதிவாகியிருந்த நிலையில், தொடர்ந்து நேற்றும் மழை பெய்ததால் வீரக்கல்புதூர் டவுன் பஞ்சாயத்து 7வது வார்டு சக்தி நகரில் உள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
ஓடை நிரம்பி வழிவதால், அதன் அருகில் வசிக்கும் சுமார் 10 கூலித்தொழிலாளர்களின் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அரிசி, சமையல் பொருட்கள், தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தண்ணீரில் மூழ்கின. மழை நின்றதும், சுப்ரமணியன், துரைசாமி, லதா, அன்பு, சிலம்பரசன் ஆகியோர் தங்கள் வீடுகளில் தேங்கி நின்ற மழைநீரை சுயமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வீரக்கல்புதூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று மழைநீர் புகுந்த வீடுகளை நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்கள் மூலம் ஓடையில் தேங்கியிருந்த மணல், செடி, கொடிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், வீடுகளில் புகுந்த மழைநீரை வெளியேற்றுவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu