கோர்ட்டில் தப்பி ஓட முயன்ற கைதி சுற்றி வளைத்த போலீசார்

கோர்ட்டில் தப்பி ஓட முயன்ற கைதி சுற்றி வளைத்த போலீசார்
X
பைக் திருருட்டு சம்பவத்தில் கைது செய்து அவரை கோட்டில் விசாரணையின் பொது தப்பி ஓட முயன்றார்

கோர்ட்டில் தப்ப முயன்ற கைதியை வளைத்த போலீஸ்

ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 5 பேரை, சேலம் மத்திய சிறையிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஓமலூர் நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்து வந்தனர்.

மாலை 4:00 மணியளவில் நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்திருந்தபோது, பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த எபின்ஜானி (30) என்பவர் திடீரென போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடினார்.

எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவரை விரட்டிச் சென்றனர். நீதிமன்றத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வேனில் இருந்த போலீசார் எபின்ஜானியை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இந்தச் சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கைதியைப் பிடித்த போலீசார், அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, பின்னர் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai tools for education