யானை தாக்கி உயிரிழந்த முதியவர்

யானை தாக்கி உயிரிழந்த முதியவரின் குடும்பத்துக்கு ஆறுதல் :
அந்தியூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட விராலிகாட்டூர் கிராமத்தை சேர்ந்த அங்கப்பன் (வயது 79), சில நாட்களுக்கு முன், சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சீலக்கரடு பகுதியில் காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியிருந்தனர். இந்த நிலையில், நேற்று அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அரசு சார்பாக வழங்கப்படும் முதல் கட்ட நிவாரணமாக ரூ.50,000 பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் சென்னம்பட்டி வனப்பகுதி ரேஞ்சர் ராஜா, மாவட்ட பிரதிநிதி மாணிக்கம், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் அய்யாசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu