கர்நாடகா அரசு பஸ்சை தாக்க முயன்ற நால்வர் கைது

புன்செய் புளியம்பட்டி அருகே சத்தயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில், கர்நாடக அரசு பஸ்சை வழிமறித்து தாக்க முயன்ற நான்கு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவையிலிருந்து மைசூரு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கர்நாடக அரசுப் பேருந்து, நல்லூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நால்வர், திடீரென பஸ்சின் முன் வழியை மறித்தனர்.
அவர்கள் ரகளையில் ஈடுபட்டு, பஸ்சின் முன்பக்க கண்ணாடிகளை கற்களால் உடைக்க முயன்றனர். இது ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. உடனடியாக ஓட்டுநர் அருகில் வந்த வாகன ஓட்டிகளிடம் உதவி கோர, அதே சமயம் அங்கு வந்த போலீசார், குற்றவாளிகளை கட்டுப்படுத்தி கைது செய்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட நால்வரும் புளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த சஞ்சய், அப்புசாமி, ரோகித் மற்றும் பண்ணாரி என தெரியவந்தது.
குறிப்பாக, அப்புசாமி மீது ஏற்கனவே 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நால்வரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu