கோழி, ஆடு திருடர்களால் விவசாயிகள் அதிர்ச்சி

கோழி, ஆடு திருடர்களால் விவசாயிகள் அதிர்ச்சி
X
அந்தியூர் பகுதியில், விவசாயி வீட்டின் முன் கட்டி வைக்கப்பட்டிருந்த மூன்று பெரிய ரக நாட்டுக்கோழிகளை, இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு மர்ம நபர்கள் திருடி சென்றனர்

அந்தியூர் பகுதியில் கோழி, ஆடு திருடர்களால் விவசாயிகள் அதிர்ச்சி :

அந்தியூர் அருகே உள்ள வட்டக்காடு தோனிமடுவு பகுதியில், விவசாயி சரவணனின் வீட்டின் முன் கட்டி வைக்கப்பட்டிருந்த மூன்று பெரிய ரக நாட்டுக்கோழிகளை, இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து சரவணன் வெள்ளித்திருப்பூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம், ராமகவுண்டன்கொட்டாய் பகுதியில் இருவர், பைக்கில் வந்து ஒரு ஆட்டைக் கடத்திய சம்பவமும் நேர்ந்துள்ளது. இவ்வாறு இருசக்கர வாகனத்தில் திருடர்கள் சுற்றித் திரிந்து, வீட்டு பண்ணைச் சொத்துக்களை இலக்காகக் கொண்ட சம்பவங்கள், உள்ளூர் மக்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

Tags

Next Story