மர்ம விலங்குகள் தாக்குதலால் கிராம மக்கள் அதிர்ச்சி

மர்ம விலங்குகள் தாக்குதலால் கிராம மக்கள் அதிர்ச்சி
X
நேற்று முன்தினம் நள்ளிரவில், வெறிநாய் மற்றும் மர்ம விலங்குகள் பட்டிக்குள் புகுந்து தாக்கியதில் நான்கு ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின

ஈரோடு மாவட்டத்தில் மர்ம விலங்குகள் தாக்குதலால் மக்கள் பதற்றம்

ஈரோடு அருகே கதிரம்பட்டி பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கவேலு என்பவர், பவளத்தாம்பாளையம் பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். அத்துடன், பட்டி அமைத்து ஆடுகளையும் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், வெறிநாய் மற்றும் மர்ம விலங்குகள் பட்டிக்குள் புகுந்து தாக்கியுள்ளன. இதில் நான்கு ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. மேலும், ஒரு ஆடு உயிருக்கு போராடி வருகிறது. சம்பவம் குறித்து வருவாய் துறையினர் மற்றும் ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல, தாளவாடி அருகே முதியனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரபு தனது தோட்டத்தில் வளர்த்துவரும் மாடுகளை கவனித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வனப்பகுதியில் இருந்து வந்த மர்ம விலங்கு, ஒரு மாட்டை கழுத்தில் கடித்துள்ளது. வலியால் மாடு அலறி ஓடிய நிலையில், அதைக் கண்ட விவசாயிகள், மர்ம விலங்கு தப்பிச் சென்றதை கண்டுள்ளனர். சிறுத்தையா, புலியா என்பது உறுதி செய்யப்படாத நிலையில், அந்தப் பகுதியில் பெரும் பீதி நிலவுகிறது.

Tags

Next Story
Similar Posts
காளியம்மன் கோவில் நிலம் உயர் நீதிமன்ற உத்தரவால்  அளவீடு
தண்ணீர் பற்றாக்குறையால் கிராமங்களில் மக்கள் பெரும் அவதி
ராசிபுரம் சுற்று வட்டாரத்தில் பருத்தி ஏலம்
சேலத்தில் எம்.சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு
பெருமாநல்லூர் காளியம்மன் கோவில்  உண்டியலில் குவிந்த காணிக்கை
குடிபோதையில் மாத்திரை வழங்கியதாக நோயாளிகள் குற்றசாட்டு
நாமக்கல்லில்,பசுமை பரப்பை 33%க்கு உயர்த்த 9 லட்சம் மரக்கன்றுகள் நடுதல் திட்டம்
மர்ம விலங்குகள் தாக்குதலால் கிராம மக்கள் அதிர்ச்சி
ஹஜ் பயணிக்கும் 105 பேருக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது
சாராயம் காய்ச்சிய, பட்டதாரிகள் இருவர் கைது
வெண்ணந்தூரில் நீர்மோர் பந்தல் திறப்பு
கோடைச் சிறப்பாக! கொல்லிமலையில் குடும்ப உற்சாகம்
பைக்கில் சென்ற வாலிபர் லாரி மோதி பலி