சட்டவிரோத மரவெட்டுக்கு கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

சட்டவிரோத மரவெட்டுக்கு கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை
X
மரப்பட்டைகளை வெட்டி கடத்த முயன்ற நபரை வனத்துறையினர் பிடித்து அபராதம் விதித்தனர்

மரப்பட்டை கடத்த முயன்ற வாலிபருக்கு ரூ.20,000 அபராதம்

சேலம் சேர்வராயன் வடக்கு வனச்சரக அலுவலர் பழனிவேல் தலைமையிலான குழுவினர், போதக்காடு காப்புக்காடு வனப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது ஒருவர் மரப்பட்டைகளை கத்தியால் வெட்டி உரித்துக்கொண்டு இருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், அவர் தர்மபுரியைச் சேர்ந்த மாது (வயது 49) என்பதும், அந்த மரப்பட்டைகளை வெட்டி கடத்த முயன்றதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story