நெசவாளர் சங்கங்களின் குற்றச் சாட்டு

நெசவாளர் சங்கங்களின் குற்றச் சாட்டு
X
சென்னிமலையில், உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 10% கூலி உயர்வு ஆழ்ந்த ஏமாற்றமாக கருதப்படுகிறது

சென்னிமலை நெசவாளர்கள் வேதனை

சென்னிமலை மற்றும் சுரகிரி பகுதிகளில் உள்ள கைத்தறி நெசவாளர்கள், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 10% கூலி உயர்வை ஆழ்ந்த ஏமாற்றமாக வர்ணிக்கின்றனர்.

வாழ்வாதாரச் சிக்கல்களுக்கு தீர்வு இல்லாத இந்த உயர்வு, ஆண்டுதோறும் வரும் "பொதுவான கண்துடைப்பு அறிவிப்பு" என நெசவாளர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

அவர்கள் கூறுவதாவது:

இன்று ஒரு குடும்பம் நடத்தக் கூட முடியாத அளவுக்கு செலவுகள் அதிகமாகிவிட்டன. இந்த சிறிய உயர்வில் காய்கறியே வாங்க முடியவில்லை. உண்மையான மாற்றம் வேண்டுமெனில், 20% கூலி உயர்வும், கூடுதல் செலவினங்களை அரசே ஏற்க வேண்டியதும் தேவை. மேலும், மழைக்கால நிவாரணத்திற்கான வாக்குறுதி கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை,என குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags

Next Story