விளையாட்டு விடுதிக்கு விடிய விடிய போட்டி – ஈரோட்டில் 110 மாணவர்கள் கலந்துகொண்ட பெரும் தேர்வு

விளையாட்டு விடுதிக்கு விடிய விடிய போட்டி – ஈரோட்டில் 110 மாணவர்கள் கலந்துகொண்ட பெரும் தேர்வு
X
விளையாட்டு விடுதிகளில் சேர்க்கையை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட அளவிலான தேர்வு போட்டி நேற்று வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஈரோட்டில் மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதி தேர்வு – 110 மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர் :

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் சேர்க்கையை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட அளவிலான தேர்வு போட்டி நேற்று வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஏழாம் வகுப்பிலிருந்து பிளஸ் 1 வரை கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கான இந்த தேர்வில், ஈரோடு மற்றும் சுற்றுப்புறங்களை சேர்ந்த 110 மாணவர்கள் பங்கேற்று, தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் தங்களின் திறமைகளை வெளிக்காட்டினர்.

இந்த தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தேர்வாகி, விளையாட்டு விடுதியில் சேர்க்கை பெற வாய்ப்பு கிடைக்கும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் தெரிவித்தார். மாணவியருக்கான தேர்வுகள் இன்று நடைபெறவுள்ளன.

Tags

Next Story