போப் பிரான்சிஸ் மறைவுக்கு, சேலத்தில் அஞ்சலி அஞ்சலி

போப் பிரான்சிஸ் மறைவுக்கு, சேலத்தில் அஞ்சலி அஞ்சலி
X
போப் பிரான்சிஸ் மறைவுக்கு, சேலம் ஆயர் இல்லத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது

போப் பிரான்சிஸ் மறைவு: சேலம் ஆயர் அஞ்சலி

சேலம்: கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவையொட்டி, சேலம், மரவனேரியில் உள்ள ஆயர் இல்லத்தில் போப் பிரான்சிஸ் படத்துக்கு, நேற்று, மறைமாவட்ட ஆயர் அருட்செல்வம் ராயப்பன் தலைமையில், முதன்மை குரு மைக்கேல் ஜான் செல்வம் உள்ளிட்ட திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள், மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இரங்கல் தெரிவித்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

அதேபோல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மாநகராட்சி அலுவலகம், ரயில்வே நிலையம், கோட்ட அலுவலகம், தபால் அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள கொடி கம்பங்களில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில், நேற்று முதல், 3 நாட்கள் பறக்கவிடப்படுகின்றன.

சேலம் மறைமாவட்ட ஆயர் அருட்செல்வம் ராயப்பன் அளித்த பேட்டியில், "போப் பிரான்சிஸ் மறைவுக்கு சேலம், 4 ரோடு அருகே உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில், ஏப்ரல் 24 (நாளை) மாலை, 6:00 மணிக்கு அஞ்சலி நிகழ்ச்சி, சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பங்கேற்று, அவருக்கு இறுதி மரியாதை செய்ய வேண்டும்," என்றார்.

Tags

Next Story