இசைக்கலைஞர் வீட்டில் தீ விபத்து

சேலத்தில் இசைக்கலைஞர் வீட்டில் தீவிபத்து – வாத்திய கருவிகள் உட்பட பொருட்கள் சேதம்
சேலம் அஸ்தம்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த முருகன் (வயது 60) ஒரு இசைக்கலைஞராக பல்வேறு நிகழ்ச்சிகளில் வாத்தியம் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை 11:00 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். சிறிது நேரத்திலேயே அவரது வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.
அண்டை வீட்டார் உடனடியாக செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ஒருமணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், அதற்குள் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, மற்ற உபயோகப் பொருட்கள் மற்றும் வாத்திய கருவிகள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன.
அஸ்தம்பட்டி போலீசார் நடத்திய ஆரம்பக் கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாகவே தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu