விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
X
அந்தியூர் சந்தையில், விற்பனைக் கூட்டத்தில் வெற்றிலையின் விலை, குறைந்ததால், விவசாயிகள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நேற்று நடைபெற்ற வார சந்தையில், வெற்றிலை விற்பனைக் கூட்டம் நடந்தது. இவ்வேளையில், வெற்றிலை வகைகளுக்கான விலை குறைந்ததால், விவசாயிகள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர்.

முன்னதாக ரூ.120க்கு விற்கப்பட்ட ராசி வெற்றிலை (பெரிய ரகம்) இந்த வாரம் ஒரே கட்டுக்கு ரூ.70க்கு மட்டுமே விற்பனையானது. சிறிய ரகம் ரூ.30க்கு விற்கப்பட்டது. பீடா வெற்றிலை ஒரு கட்டுக்கு ரூ.30 முதல் 50 வரையிலும், செங்காம்பு வெற்றிலை ஒரு கட்டு ரூ.5 முதல் ரூ.15 வரையில் விலை இருந்தது.

சந்தையில் மொத்தமாக சுமார் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் வெற்றிலை வர்த்தகம் நடந்தது. வெற்றிலை வரத்து அதிகமானதால், இந்த வாரம் விலை ரூ.50 வரை வீழ்ச்சியடைந்தது. தொடர்ந்து விலை இவ்வாறு குறைந்தால், விவசாயிகள் நிலைமை பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story