பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் தொடக்கம்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் தொடக்கம்
X
இந்த வருடத்துக்கான 10 ம் வகுப்பு பொது தேர்வுகான விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. ஏப்ரல் 30-க்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28-ல் தொடங்கி, ஏப்ரல் 15 வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 9.13 லட்சம் மாணவ, மாணவியர் இத்தேர்வில் கலந்து கொண்டனர்.

தேர்வு முடிந்தவுடன், விடைத்தாள்கள் மண்டல அளவிலான சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் குகை மேல்நிலைப்பள்ளி மற்றும் தாரமங்கலம் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இம்மையங்களில் நேற்று முதல் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன. 3,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய உள்ளனர். ஏப்ரல் 30-க்குள் விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags

Next Story