பொன்காளியம்மன் அருளால் குண்டம் இறங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள்

பொன்காளியம்மன் அருளால் குண்டம் இறங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள்
X
இவ்விழாவிற்காக பிரம்மதேசம், புதுார், வெள்ளையம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வந்து பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர்

புகழ்பெற்ற பொன்காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் குண்டம் இறங்கும் திருவிழா, இம்முறையும் பக்தி உணர்வோடு நடைபெற்றது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் விழா ஆரம்பமாகி, தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று, விழாவின் முக்கிய பகுதி எனக் கருதப்படும் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன் ஆரம்பத்தில், அம்மனிடம் வாக்குக் கேட்கப்பட்டு, அந்த வாக்கின் அடிப்படையில் முதலில் கோவில் பூசாரி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினார். இதைத் தொடர்ந்து விரதமிருந்து வந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக குண்டம் இறங்கினர். இவ்விழாவிற்காக பிரம்மதேசம், புதுார், வெள்ளையம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்து ஆனந்தமடைந்தனர்.

Tags

Next Story