கருணைக் கொலை மனு, கருணாநிதி படத்துக்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம்

கருணாநிதி படம் முன் 'கருணைக்கொலை மனு' - கவுரவ விரிவுரையாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் 7 கல்வியியல் கல்லூரிகள் என மொத்தம் 171 கல்லூரிகளில் 7,324 கவுரவ விரிவுரையாளர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, காலமுறை ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நாள்களில் பல்வேறு சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10-ஆம் தேதி, "கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில் கருணைக்கொலை செய்துவிடுங்கள்" என தமிழக அரசுக்கு கவுரவ விரிவுரையாளர்கள் ஆட்சி மன்றக் குழு சார்பில் மனு அனுப்பினர்.
இந்நிலையில் நேற்று, சேலம் மாவட்டம் ஆத்தூர் வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திற்கு முன்பாக கருணைக்கொலை மனுவை வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது: "நாங்கள் கொத்தடிமைகள் போன்று பணிபுரிந்து வருகிறோம். எங்களது பணியை நிரந்தரம் செய்வதாக திமுக 2021 சட்டசபைத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத் தீர்ப்பையும் நிறைவேற்றவில்லை" என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu