மத்திய அரசுக்கு எதிராக காங்.ஆர்ப்பாட்டம்

மத்திய அரசுக்கு எதிராக காங்.ஆர்ப்பாட்டம்
X
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு கண்டனம், ஆத்தூரில் காங். ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அர்த்தனாரி தலைமை வகித்தார்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள், "நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் மீது மத்திய அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது" என்று குற்றம் சாட்டினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், ஆத்தூர் நகரத் தலைவர் முருகன், முன்னாள் சேர்மன் சக்கரவர்த்தி உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story