ஜங்க் உணவவில் - புற்றுநோயா? ருசிக்குள் மறைந்துள்ள புற்றுநோய்!உணவு பழக்கத்தில் பதறவைக்கும் உண்மை! மருத்துவரின் முக்கிய ஆலோசனை!

உடல்நலத்திற்கு அபாயம் விளைவிக்கும் பழக்கங்கள் – மருத்துவ எச்சரிக்கைகள் வெளியீடு :
உடல்நோய், காய்ச்சல், தலைவலி போன்றவற்றில் பராசிடாமால் மாத்திரைகள் பெரும்பாலும் நம் வீட்டில் கிடைக்கும் 'பாதுகாப்பான' மருந்தாகவே கருதப்படுகின்றன. ஆனால் சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் அதற்கே எதிராக சொல்கின்றன. தொடர்ச்சியாக பராசிடாமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரக பாதிப்பு போன்ற தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், சிறிய தலைவலிக்கே மாத்திரையை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். குறைந்தபட்சம் மருத்துவர் ஆலோசனையுடன் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டியது அவசியம்.
ஜங்க் உணவுகள்: ருசிக்குப் பின்னால் மறைந்திருக்கும் புற்றுநோய் அபாயம்.
பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வில், அதிக அளவு செயற்கைச் சேர்க்கை உள்ள சின்ன உணவுகள் (ultra-processed foods) – போலி சாக்லெட்டுகள், இனிப்பு பானங்கள், பேக்கரி ஸ்நாக்ஸ் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் 25% அதிகம் என்பதைக் காட்டுகிறது. இந்த உணவுகளில் உள்ள ரசாயனங்கள், செயற்கை நிறங்கள் மற்றும் அதிக சர்க்கரை, உப்பு சேர்க்கைகள் நம் உடலின் செல் வளர்ச்சியை பாதித்து தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும்.
இதனைத் தவிர்க்க இயற்கையான உணவுகளை தினசரி உணவில் அதிகரிப்பது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu