மேட்டூர் அணையில் தடுப்பணை சீரமைப்பு

மேட்டூர் அணையில் இருந்து கரையோர மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் பணிக்காக, காவிரியில் விடப்படும் நீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 8 கண் மதகில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி அளவில் காவிரி ஆற்றில் நீர் திறக்கப்படும் நிலையில், அந்த பகுதியில் உள்ள தடுப்பணையில் சீரமைப்பு தேவைப்பட்டதால், நேற்று காலை அந்தப் பணிகள் தொடங்கப்பட்டன.
தடுப்பணை அருகே குவிந்திருந்த கற்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு, தடுப்பணையை புதுப்பிக்கும் பணி முழுவீச்சில் நடத்தப்பட்டது. இதன் காரணமாக, சீரமைப்பு நடைபெறும் ஒரு நாளுக்கான குடிநீர் மட்டும், வழக்கம்போல் காவிரியில் அல்லாமல், மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்கள் வழியாக வெளியேற்றப்பட்டது.
முனியப்பன் கோவில் வழியாக வெளியேறும் குடிநீர் வழியையும் இந்த சீரமைப்பு நாளில் மாற்றியமைக்க நேர்ந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் வழக்கம்போல் காவிரியாற்று வழியே நீர் வெளியேற்றம் நடைபெறும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu