பா.ஜ., மாநாடின் கால்கோள் விழா

வரும் 19ல் பா.ஜ., மாநாடு, இன்று கால்கோள் விழா
பாரதிய ஜனதா கட்சியின் "தேசம் காப்போம் தமிழகம் வெல்வோம்" என்ற தலைப்பிலான மாநாடு வரும் 19ஆம் தேதி ஓமலூர் அருகே பைபாஸ் சாலையில் உள்ள தாமரை திடலில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கான கால்கோள் விழா இன்று காலை 9:00 மணிக்கு நடைபெறும் என பா.ஜ., மாநில துணைத்தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் பா.ஜ., மாநில தலைவர் கே. அண்ணாமலை உரையாற்றவுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை விளக்கும் கண்காட்சி அமைக்கப்படவுள்ளது. இந்தக் கண்காட்சியை மத்திய அமைச்சர் எல். முருகன் திறந்து வைக்கவுள்ளார்.
மாநாட்டுக்காக தேசிய, மாநில, மாவட்ட தலைவர்கள் அமரும் வகையில் மேடையும், 25,000 பேர் அமரும் வகையில் பந்தலும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கால்கோள் விழாவைத் தொடர்ந்து, அருகிலுள்ள தனியார் ஓட்டலில் மாநில துணைத்தலைவர்கள் துரைசாமி, நரேந்திரன் மற்றும் மாவட்ட தலைவர்கள் முன்னிலையில் மாநாட்டு குழுக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து குழுக்களின் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சேலம் மேற்கு, கிழக்கு, மாநகர் மாவட்ட, மண்டல தலைவர்கள் மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் பங்கேற்று பணிகளுக்குப் பொறுப்பேற்குமாறு ராமலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu