டி.என்.பாளையத்தில் சூறாவளி அட்டகாசம்

டி.என்.பாளையத்தில் சூறாவளி அட்டகாசம்
X
டி.என்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி மழையினால் மரங்கள் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்த பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

டி.என்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி மழையினால் மரங்கள் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்த பெரும் பாதிப்பு :

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம், நம்பியூர், கோபி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை அடித்த சூறாவளி காற்றும், பின்னதாக பெய்த ஆலங்கட்டி மழையும் பரவலான சேதங்களை ஏற்படுத்தின.

மரங்கள் வேருடன் சாய்ந்து வீதிகளில் போக்குவரத்தை பாதித்ததுடன், மின் கம்பிகள் முறிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வாணிப்புத்தூர், சத்தியமங்கலம், நம்பியூர் பகுதிகளில் மரங்களில் இடி விழுந்து தீப்பற்றி எரிந்த சம்பவங்கள் பதிவாகின. மின்வாரியப் பணியாளர்கள் உடனடி பழுது பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story