ரவுடி கொலை வழக்கில் குண்டர் சட்டம் தாக்கல்

ரவுடி கொலை வழக்கில் குண்டர் சட்டம் தாக்கல்
X
கலெக்டர் பரிசீலித்து ஒப்புதல் வழங்கியதன் பேரில், கார்த்திகேயன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சேலம் ரவுடி கொலை வழக்கு

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜான், கடந்த மார்ச் 19ஆம் தேதி நசியனூர் அருகே கும்பல் தாக்குதலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சம்பவத்தின்போது வெட்டு காயங்களுடன் கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் ( மைனா கார்த்தி, வயது 29), சேலத்தைச் சேர்ந்தவர் . அவரை சித்தோடு போலீசார் கைது செய்து, தொடக்கமாக திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

கார்த்திகேயன் மீது தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் நிலவுவதையும், சமுதாயத்திற்கு அபாயமாக இருப்பதையும் கருத்தில் கொண்டு, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, சித்தோடு போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) மூலம் கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் பரிந்துரை செய்தனர்.

கலெக்டர் பரிசீலித்து ஒப்புதல் வழங்கியதன் பேரில், கார்த்திகேயன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதன் அடிப்படையில், அவர் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story