சூறாவளியில் பறந்த தகடு – சென்னிமலையில் முருகன் தேரின் கொட்டகை பாதிப்பு

சூறாவளியில் பறந்த தகடு – சென்னிமலையில் முருகன் தேரின் கொட்டகை பாதிப்பு
X
ஈரோடு மாவட்டத்தில் வெயிலுக்குப் பின் குளிர்ச்சியுடன் மழை பெய்ததில் பல பகுதிகளில் சாரல், புயல்காற்று, மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் வெயிலுக்குப் பின் குளிர்ச்சியுடன் மழை – பல பகுதிகளில் சாரல், புயல்காற்று, மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று வெப்பம் சற்று குறைந்து, மழையும் குளிர்ச்சியும் அனுபவிக்கப்பட்டது.

கடந்த இரு மாதங்களில் 100 டிகிரியைத் தாண்டிய வெப்பநிலை பதிவாகி வந்த நிலையில், நேற்று காலை 7 மணி முதல் வெப்பம் அதிகமாக இருந்தது. ஆனால், மதியம் 1 மணிக்கு மேல் மேகமூட்டம் காணப்பட்டதால் வெப்பம் தளர்ந்தது.

மாலை 5 மணிக்கு மேல், லேசான மின்னல், இடியுடன் கூடிய சாரல் மழை சில இடங்களில் கொட்டியது. இந்நிலையில், மாவட்டத்தில் 99.2 டிகிரி வெப்பநிலை பதிவாகி, பிற மாவட்டங்களை விட 0.5 முதல் 2.8 டிகிரி வரை அதிகமாக இருந்தது.

கோபி மற்றும் சுற்றுப்பகுதிகளில், காலை முழுவதும் அக்னி வெயில் வாட்டிய நிலையில், மாலை 4 மணிக்கு பஸ் ஸ்டாண்ட், புதுப்பாளையம், மொடச்சூர் சாலை, கரட்டூர், குள்ளம்பாளையம் பகுதிகளில் பத்து நிமிடங்களுக்கு லேசான தூரல் மழை பெய்தது. இரவில் வானம் முழுவதும் மேகமூட்டமாக காணப்பட்டது.

டி.என்.பாளையம் அருகே, கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், புஞ்சை துறையம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், மதியம் 2.30 முதல் 3.00 மணிவரை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் கணக்கம்பாளையத்தில் உள்ள புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து தோட்டத்திற்குள், மற்றொரு மரம் மெயின் ரோட்டில் முறிந்து விழுந்தது.

இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்கள் பிரிவில் பயணிகளை இறக்கி விட்டுச் சென்றன. பின்னர் நெடுஞ்சாலைத் துறையினர் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீராக்கினர்.

சென்னிமலை நகரிலும், காலை முதல் கடும் வெப்பம் நிலவிய நிலையில், மதியம் 2 மணிக்கு மேல் மேகமூட்டம் காணப்பட்டது. மாலை 4:30 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை ஒருமணி நேரத்திற்கு பெய்தது.

மழையுடன் வீசிய சூறாவளி காற்றால், சென்னிமலை முருகன் கோவிலின் தை தேரின் கொட்டகையின் மேல் தகடு பறந்து வீழ்ந்தது.

இதையடுத்து தேர்பணி நடத்தி வந்த ஆசாரியர் சோமு விரைந்து சென்று கொட்டகையை சரிசெய்தார்.

Tags

Next Story