சேலத்தில் 4 கண்டக்டர்களுக்கு பரிசு

சேலத்தில் 4 கண்டக்டர்களுக்கு பரிசு
X
சேலத்தில் பணமில்லா பரிவர்த்தனை மூலம் சாதனை – 4 கண்டக்டர்களுக்கு ஊக்க பரிசு

பணமில்லா பரிவர்த்தனை: 4 கண்டக்டர்களுக்கு பரிசு

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் இ.டி.எம். மெஷின் மூலம் பணமில்லா பரிவர்த்தனையாக பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் சிறப்பாக செயலாற்றிய கண்டக்டர்களுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதத்தில் சேலம் மண்டலத்தில் பணமில்லா பரிவர்த்தனையை அதிகம் மேற்கொண்ட கண்டக்டர்களான சிவசண்முகம், கந்தசாமி மற்றும் தர்மபுரி மண்டலத்தைச் சேர்ந்த பார்த்திபன், அர்த்தனாரி ஆகிய நால்வருக்கும் ஊக்கப்பரிசாக கைக்கடிகாரங்கள் வழங்கப்பட்டன.

நேற்று நடைபெற்ற விழாவில் சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் ஜோசப் டயல் இந்த கைக்கடிகாரங்களை கண்டக்டர்களுக்கு வழங்கி, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் அவர்களது சேவையைப் பாராட்டினார்.

Tags

Next Story