கார் கதவை பூட்டாமல் விட்டதின் விளைவு – 60 ஆயிரம் திருடிய வாலிபர் கைது

கார் கதவை பூட்டாமல் விட்டதின் விளைவு – 60 ஆயிரம் திருடிய வாலிபர் கைது
X
ஈரோட்டில் காரில் இருந்த ரூ.60 ஆயிரம் பணத்தை திருட முயன்ற வாலிபர், பொதுமக்கள் விரட்டியபோது சுவர் மீது ஏறி கீழே விழுந்து காயத்துடன் சிக்கினார்

கார் கதவை பூட்டாமல் விட்டதால் பணம் திருட்டு :

ஈரோடு வெள்ளோடு பூங்கம்பாடி பாறை வலசு பகுதியை சேர்ந்த பாலகுமரன் (38) என்பவர், பெரியார் நகர் பகுதியில் தனது ஹோண்டா சிட்டி காரை கதவை பூட்டாமல் நிறுத்தி சென்றார். காரின் டாஷ்போர்டில் வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்வதாகக் கூறப்படுகிறது. சந்தேக நபரை பார்த்து பாலகுமரன் கூச்சலிட்டவுடன், பொதுமக்கள் அவரை விரட்டினர். தப்பிக்க முயன்ற அந்த நபர், அருகிலிருந்த சுவரை ஏறிச் செல்லும் போது கீழே விழுந்து கால் மற்றும் தலையில் காயம் அடைந்தார்.

துரிதமாக தேடப்பட்ட அந்த நபர், சூரம்பட்டி ஸ்டாலின் வீதியைச் சேர்ந்த சீனிவாசன் (26) என அடையாளம் காணப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு, காயங்களுக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருடப்பட்ட பணமும் மீட்கப்பட்டது.

Tags

Next Story