மின் கசிவால் தொழிலாளி குடிசை முழுமையாக எரிந்து சேதம்!

மின் கசிவால் தொழிலாளி குடிசை முழுமையாக எரிந்து சேதம்!
X
வீட்டில் திடீரென மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டு வீட்டு பொருட்கள் மொத்தமும் சேதமடைந்தது.

மின் கசிவால் எரிந்த குடிசை – தொழிலாளி குடும்பம் பாதிப்பு :

திருப்பூர் அருகே எண்ணமங்கலம் அடுத்த குன்னிக்காட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மன்னாதன் (வயது 45) தனது குடும்பத்துடன் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை, வீட்டில் திடீரென ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

அதிர்ச்சியடைந்த மன்னாதனும், அக்கம்பக்கத்தினர் சில நேரம் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் தீயின் தீவிரம் காரணமாக அவர்கள் முயற்சி வீணாகி விட்டது. உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினாலும், குடிசை முற்றாக எரிந்து சேதமடைந்தது. வீடில் இருந்த அணைத்து பொருட்களும் சாம்பலானது.

தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலர் சதீஷ்குமார் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
crop opportunities ai agriculture