கோபியில் அமைச்சர் பதவிக்கே தகுதியில்லை என அதிரடி கண்டன பேச்சு

கோபியில் அமைச்சர் பதவிக்கே தகுதியில்லை என அதிரடி கண்டன பேச்சு
X
பெண்களை இழிவுப்படுத்தும் வகையில், ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து, கோபியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

கோபியில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். தி.மு.க. அரசு தத்தளிக்கிறது என்றும், அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமாக பேசியதை கண்டித்து, அ.தி.மு.க. வலுவான பதிலடி தரும் என்றும் அவர் கூறினார். பெண்களை இவ்வாறு பேசிய அமைச்சர் பதவிக்கே தகுதியற்றவர் என்றும், 2026 சட்டசபை தேர்தலில் இதற்கான பதிலை மக்கள் தருவார்கள் என்றும் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் பவானிசாகர் எம்.எல்.ஏ பண்ணாரி, முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story